தல அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் தள்ளிவைப்பு.!அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறனைக் காட்டி ரசிகர்களை கவறாமல் தனது அன்பை காட்டி ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தான் தல அஜித் இவர் தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்க இருக்கிறது.

வலிமை படத்தின் அப்டேட் ஏதாவது வெளிவருமா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற மே 1ம் தேதி தல அஜித் பிறந்த நாளான அன்று வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ரசிகர்களும் நாட்களை எண்ணி வந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் அஜித் தங்களது ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் லுக்கை கொஞ்சம் தள்ளி வைத்துவிடலாம் என யோசித்து இருப்பார் போல.

இதனால் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர்கள் வெளியிட தள்ளி வைத்துள்ளார்களாம் மேலும் இதற்கு முன்பே ஒரு முறை இந்த நிகழ்வுகள் நடந்தது இதேபோல் இது இரண்டாவது நிகழ்வாக நடந்ததால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

valimai

என்னதான் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் தல சொன்னது சரிதான் என ஒரு சில ரசிகர்கள் கூறி வர ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மூலம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டால் எந்த அச்சமும் இல்லை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.மேலும் தல அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்படியாவது இந்த வருடத்தில் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version