இந்தியாவிலேயே முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம். !! இணையதளத்தில் மிரட்டும் 5 நிமிட வீடியோ.!

0

first marshial art movie 5 minute video viral:ஹாலிவுட்டில் புரூஸ் லீ திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட் குறித்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, அதுமட்டுமில்லாமல் புரூஸ்லி திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞரும் புரூஸ்லி போல் மாற வேண்டும் என நினைத்ததுண்டு.

சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர்களில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் ஒருவர், இவர் லாக்டவுன் காலகட்டத்தில் கவர்ச்சி கலந்த திரில்லர் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அந்த வகையில் தற்போது ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள திரைப்படம் லடுக்கி இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்திலிருந்து ஐந்து நிமிட வீடியோ பாடலை இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் மார்ஷியஸ் ஆர்ட் கலைஞராக நடித்துள்ளார் பூஜா சண்டைக்காட்சிகளிலும், கவர்ச்சி காட்சிகளிலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.