சிவகார்த்திகேயன் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! விவரம் இதோ.!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்தியன் அவர்கள் தற்பொழுது டாக்டர் படத்தில் நடிக்க உள்ளார்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாக கே ஜே ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கவுள்ளார்.

இவர் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி வெற்றி  பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் இசையமைக்க அனிருத் அவர்கள் கமிட்டாகி உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இதற்கு முன்பு எங்கள் வீட்டு பிள்ளை வெற்றியை தொடர்ந்து அவர் இப்படத்தில் நடிக்கிறார் இப்படமும் வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Comment