தாதா கெட்டப்பில் பிரேம்ஜி.! அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பட்டையை கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

0

வெள்ளித்திரையில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர்,பாடகர் போன்ற அனைத்து திறமைகளும் கொண்டு விளங்குபவர் தான் பிரேம்ஜி இவர் தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் குறிப்பாக இவரது அண்ணன் வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் என்றால் இவரும் அந்த திரைப்படத்தில் கண்டிப்பாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறார். பிரேம்ஜி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் இவர் நடித்த மாங்கா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விட்டது.

மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பார்த்தால் இவர் நடிக்கும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் எப்போது நீங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் என கேட்டு வருகிறார்கள் இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இவர் புதிதாக நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆம் இவர் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரேம்ஜி பார்ப்பதற்கு ஒரு ரவுடி கெட்டப்பில் காட்சியளிக்கிறார் அதுமட்டுமல்லாமல் மதுபானத்துடன் கையில் சைக்கிள் செயின் சிகரெட் என ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

இவர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.