வெளியானது குஷி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் ரசிகர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவர்கள் தற்போது நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு குஷி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குஷி படத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா அவர்கள் நடித்து வருகிறார்.

kushi
kushi

சமந்தாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தற்போது குஷி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குஷி திரைப்படத்தி நவீன் ஏர்னெனி மற்றும் ரவிசங்கர் எலமஞ்சிலி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஸ்கிரினில் பார்ப்பதற்கு இந்த இரண்டு ஜோடிகளும் மிகவும் அழகாக உள்ளனர் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Leave a Comment