2 ஹாட் ஹீரோயின்களுடன் இணைந்து நடிக்கும் ஜெய்யின் ‘தீராத காதல்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரும் படங்கள் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு பெரிதாக வெற்றியை பெறவில்லை. மேலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாமல் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக இதற்கு மேல் ஒரு வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், ஜீவா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் தான் காபி வித் காதல் இந்த படத்தினை சுந்தர் சி இயக்கி இருந்த நிலையில் வெளியாகி படு மோசமான விமர்சனங்களை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜெய் லைக்கா நிறுவனத்தின் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தான் லைக்கா தொடர்ந்து மிகப்பெரிய நடிகர்களின் பல கோடி பட்ஜெட் உள்ள திரைப்படத்தினை இயக்கி வரும் நிலையில் தற்போது ஜெய்யை வைத்து தீராத காதல் என்ற படத்தினை தயாரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தினை ரோகின் இயக்க இருக்கும் நிலையில் ஜெய்யுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  இவ்வாறு சமீப காலங்களாக கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யுடன் இணைந்து நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

jeyi
jeyi

இவர்களை அடுத்து நெடுஞ்சாலை, அதே கண்கள் போன்ற திர்லர் படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவாதாவும் இந்த படத்தில் இணைந்து நடித்துப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் போஸ்டரில் இவர்கள் மூவரும் சோகத்துடன் இருப்பதைப் பார்த்தால் தீராத காதல் படம் திரில்லர் கலந்த படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment