ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது நடிகராகவும் கலக்கி வருபவர் தான் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஹிப் ஹாப் தமிழா திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் பிறகு அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது ஹிப் ஹாப் ஆதி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை ஏஆர்கே சரவணன் இயக்க விரைவில் படப்பிடிப்பு முடியை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஹிப்பாப் ஆதி இசையில், தீபக்மேனன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு வீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனவே இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் இந்த படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகும் எனவும் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஹிப்பாப் ஆதி ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு பாடல் அமைத்துள்ள நிலையில் தற்பொழுது ஏராளமான படங்களில் இருக்கு பாடல் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment