முதல் படத்திலேயே ஏழு நடிகைகளுடன் நடிக்கும் “பிக்பாஸ் நிரூப்” – படக்குழு வெளியிட்ட அப்டேட்.!

0
niroop
niroop

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பல நடிகர் நடிகைகளும் ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்துகின்றன. அப்படி பல கலைஞர்களுக்கும் அடித்தளமாக அமையும் நிகழ்ச்சி பிக் பாஸ். ஆம் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் முகம் தெரியாத பல கலைஞர்கள் கலந்து கொண்டு சினிமாவில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

பிக்பாஸ் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு சீசனில் இருந்தும் பல பிரபலங்கள் வெள்ளி திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன. இந்த நிலையில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நிரூப் நந்தகுமார்.

இவர் ஒரு மாடல் பிரபலம் மேலும் யாஷிகாவின் காதலர் என்ற அடிப்படையிலும் பிரபலமடைந்தார்.  இவர் எப்படி பிக் பாஸ் வீட்டில் நுழைந்தாரோ ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது இவருக்கு என தமிழ் ரசிகர்கள் பலரும் இருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிரூப் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .

ஆம் நிரூப் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த ஹோசிமினின் அசோசியேட் விவேக் கைபா பட்டாபிராம். இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்த படத்தின் பெயர் ரெயின்போ என பெயரிடப்பட்டுள்ளது மேலும் படத்தின் பூஜைகளும் நடைபெற்று அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த படத்தில் நிரூபி ஏழு கதாநாயகிகளுடன் நடிக்க உள்ளாராம். அந்த ஏழு கதாநாயகிகளில் ஒருவராக சிம்ரன் ராஜ் நடிக்க உள்ளார் மற்ற ஆறு கதாநாயகிகள் யார் என்பது குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. இந்த படம் அதிகளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் என பட குழு கூறிய உள்ளது.

niroop
niroop
niroop
niroop