ரிலீஸ் ஆனா முதல் நாளே தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்…

பீஸ்ட் திரைப்படம் முதல் விக்ரம் திரைப்படம் வரை திரையரங்கில் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

விக்ரம்:- இயக்குனர் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில், நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 20.61 கோடி வசூல் செய்துள்ளது.

வீரமே வாகை சூடும் :- இயக்குனர் து.பா சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமான வீரமே வாகை சூடு திரைப்படம் வெளியான முதல் நாளில் 4 கோடி வரை வசூல் செய்துள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் :- விக்னேஷ் விண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காதல் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் திரையரங்கில் வெளியாகிய முதல் நாளில் 7.10 போடி வரை வசூல் செய்தது.

எதற்கும் துணிந்தவன்:- நடிகர் சூர்யா மற்றும் மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பரோட்டா சூரி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும்  முதல் நாளில் 7.20 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கே ஜி எஃப் 2:- நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் கே ஜி எஃப்  2 இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 7.90 கோடி வரை வசூல் செய்தது.

டான்:- இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் டான். இந்த திரைப்படம்  வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 9 முதல் 10 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆர் ஆர் ஆர் :- ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வலிமை :- நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 28 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பீஸ்ட்:- இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. வெளியாகி முதல் நாளில் 37 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Leave a Comment