தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீப காலங்களாக இவருக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கில் பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக சாணிக் காகிதம் திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. மேலும் இதனை அடுத்து ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் அவருடைய தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படமும் படும் தோல்வியினை சந்தித்த நிலையில் தற்பொழுது இவர் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படமாவது இவருக்கு இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி உள்ள தசரா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நானி இயக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனை பட குழுவினர்கள் மிகவும் ஏக போகமாக நடத்தி இருந்தனர்.
அந்த வகையில் இந்த படம் நேற்று மார்ச் 30ஆம் தேதி அன்று வெளியான நிலையில் இந்த படம் மொத்தம் ரூபாய் 65 கோடி பட்ஜெட்டில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று மிகவும் வெற்றிகரமாக ஓடி வரும் தசரா திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூபாய் 33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு முதல் நாள் வசூல் ஓரளவிற்கு நல்ல வரவேற்பினை பெற்றிருக்கும் நிலையில் இதற்கு மேல் இன்னும் மிகப்பெரிய வசூலை ஈடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு படங்கள் அமையவில்லை என்றாலும் தெலுங்கு படங்களின் வாய்ப்பு இவருக்கு வரிசை கட்டி நிற்கிறது.