தமிழ் நாட்டில் ஓப்பனிங்கில் வசூலில் பட்டையை கிளப்பிய டாப் 5 அஜித்தின் திரைப்படங்கள்.! எந்தெந்த திரைப்படம் எத்தனை கோடி தெரியுமா.?

தமிழ்சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய நடிகர் என்றால் அதில் அஜித்தும் ஒருவர், இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் அஜித் படம் திரைக்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் கோலாகலமாக இருக்கும். அந்த அளவிற்கு அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம், பேனர், தாரை தப்பட்டை என கோலாகலமாக கொண்டாடி விடுவார்கள்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது இந்த ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக அஜித்தின் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது, அதுவும் ஓபனிங் வசூல் என்றாலே அஜித்தான் என்ற அளவிற்கு முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார் தல அஜித்.

அந்த வகையில் சமீபகாலமாக வெளியாகிய திரைப்படத்தில்  தல அஜித்தின் ஒப்பனிங்  தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

விசுவாசம் ரூபாய் 17கோடி, விவேகம் ரூபாய் 16.5 கோடி,வேதாளம் ரூபாய் 15.5 கோடி, நேர்கொண்டபார்வை ரூபாய் 14.5 கோடி, என்னை அறிந்தால் ரூபாய் 11 கோடி. என அஜித்தின் திரைப்படங்கள் ஒப்பனிங் வசூலில் பட்டையைக் கிளப்பி உள்ளன.

Leave a Comment