நைட்டு வீட்டுக்கு வரியா வீட்ல யாரும் இல்ல ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த முன்னணி பட இயக்குனர்.?

shalu shamu
shalu shamu

Shalu Shamu : சினிமா திரையுலகில் பல நடிகர் மற்றும் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் அனுபவங்கள் பற்றி சமீப காலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் சமீப காலமாக சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பற்றி நடிகைகள் பேட்டியில் கூறி வருகிறார்கள் அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு விஜய் தேவார கொண்ட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பிரபல இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்தது பற்றி கூறியுள்ளார்.

அவர் அந்த பேட்டியில் கூறியதாவது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகினார்கள் ஆனால் அந்த நபர் சேலை உடுத்திக்கொண்டு வரவேண்டும் என கூறினார், ஒருவேளை நல்ல பட வாய்ப்பு இருக்கும் என நம்பி நானும் அவர் சொன்ன அட்ரஸ் இருக்கும் இடத்திற்கு  சென்றேன் அங்கு போய் பார்த்தால் அவரின் குடும்ப புகைப்படம் இருந்தது அப்பொழுது தான் தெரிந்தது அது அவர் வீடு என்று.

உடனே அவரிடம் வீட்டில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்று கேட்டதற்கு அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்றுள்ளதாக அந்த நபர் கூறினார் உடனே அந்த இயக்குனர் ஒரு கிளாஸ் ஜூஸ் எடுத்துக் கொண்டு கொடுத்தார் அதை குடித்துவிட்டு கண்ணாடி மேசையில் வைத்தேன். ஆனால் அந்த இயக்குனர் கேரக்டரை பற்றி பேசுவதை விட அதிகமாக மற்ற விஷயங்களை பற்றி பேசினார்.

ஏதோ தப்பாக படுகிறது என தெரிந்தது அதனால் எனக்கு வேர்த்து கொட்டியது எனக்கு வேர்ப்பதை பார்த்து தன்னை படுக்கையறைக்கு அழைத்தார் அங்கு ஏசி இருப்பதாக கூறினார் ஆனால் நான் பயந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என கூறினார்.

ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

Shalu shammu
Shalu shammu