கே.ஜி.எஃப் 3 பற்றி வீடியோவை வெளியிட்ட படக்குழு.? இணையத்தை அலற விடும் வீடியோ இதோ.!

தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் தற்பொழுது பலமொழி திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அந்த வகையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பல கோடி வரை வசூல் செய்த திரைப்படம் தான் கே.ஜி.எஃப் 2 இந்த திரைப்படத்தின் முதலாம் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிட்டனர் வெளியிட்ட முதல் நாளிலேயே பல கோடி வரை வசூல் செய்தது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்றும் கூறலாம் இந்நிலையில் இந்த இரண்டாம் பாகம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறதாம் மேலும் கே.ஜி.எஃப் 3 பாகம் தொடங்கும் என்பது போல் இந்த இரண்டாம் பாகத்தை முடித்து இருப்பார்கள்.

ஆனால் கே.ஜி.எஃப் 3 பாகத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரவில்லை இந்நிலையில் இன்றுடன் ஒரு வருடமான விஷயத்தை கொண்டாடும் விதமாக இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இறுதியாக மூன்றாம் பாகம் வர வாய்ப்பு இருக்கிறது என்பது போல் மறைமுகமாக காட்டப்பட்டு இருக்கிறது.

இதனைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த படங்களில் இந்த கே.ஜி.எஃப் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மிகவும் முக்கியமானது அதேபோல் மூன்றாம் பாகம் வந்துவிட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எங்களுக்கும் அப்படித்தான் தெரிகிறது மூன்றாம் பாக வர வாய்ப்பு இருப்பது போல் மறைமுகமாக காட்டியுள்ளனர்.அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment