விக்ரம் திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளியானது.! அதுவும் படம் இவ்வளவு நேரமா.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் விக்ரம். மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு  திரைத்துறையில் காலடி வைத்துள்ளார்.

மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படம் எப்படி நடித்துள்ளார்  என்று ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ், ஜெயராம், நரேன் ஆண்டனி, வர்கீஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் மொத்தம் 173 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 53 நிமிடம் சுமார் கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய திரைபடத்தை ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகுமா இல்ல தோல்வி ஆகுமா என்று தெரியவில்லை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

kamal haasan
kamal haasan

Leave a Comment