Vijayakanth: நடிகர் விஜயகாந்த் குறித்து பேசிய குறித்து சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் கூறியிருப்பது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. திரை பிரபலங்கள் முதல் தனது ரசிகர்கள் வரை பலருக்கும் உதவிகளை செய்திருக்கும் விஜயகாந்தின் இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகவே தற்போது வரையிலும் இருந்து வருகிறது.
விஜயகாந்த் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக இருந்ததால் பலரால் அவமானமும் அசிங்கமும் பட்டவர். படப்பிடிப்பின் பொழுது நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டாங்க எனவும் பேட்டியில் தெரிவித்தார். முன்னணி நடிகைக்கு நல்ல சாப்பாடு எனக்கு சாதாரண சாப்பாடு என சாப்பாடு விஷயங்களில் கூட வேறுபாடுகளை காண்பித்தனர்.
எனவே தான் பட்ட அவமானம் மற்றவர்கள் யாரும் படக்கூடாது என்பதற்காக தான் சினிமாவில் வளர்ந்த பிறகு நான் என்ன சாப்பிடுகிறேனோ அதை தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என முடிவெடுத்தார். எனவே தான் ஹீரோவாக நடித்தாலும் தனக்கு கீழ் இருக்கும் அனைத்து ஜூனியர் ஆர்டிஸ்ட் பற்றியும் நினைக்கக்கூடிய ஒருவர் அப்படிதான் விஜய் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் உதவி உள்ளார் விஜயகாந்த்.
தற்பொழுது முன்னணி நடிகராக ஜொலித்து வரும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்தார். சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்தாலும் கடைசியாக விஜயகாந்த் உதவியால் விஜய் வெற்றியினை கண்டார். அதன்படி விஜய்யின் நடிப்பில் செந்தூரபாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் விஜயகாந்த் நடித்திருந்தார் 100 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது.
இதன் மூலம் விஜய் தனக்கான அடையாளத்தை பிடித்தார் இதன் காரணமாக விஜயகாந்த் மீது விஜய்க்கு தனி மரியாதை உண்டு. இந்நிலையில் சமீப பேட்டியில் பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் நான் ஒரு ஜிம் திறந்தேன் அந்த ஜிம்மை திறப்பதற்கு அப்பொழுது ஒரு ஹீரோவிடம் சொல்லியிருந்தேன் அவரும் முதலில் வருவதாக சொல்லியிருந்தார்.
அதனை நம்பி நானும் இருந்தேன் ஆனால் திடீரென அவரது உதவியாளர் போன் செய்து இல்லை அண்ணனால் வர முடியவில்லை என சொல்லிவிட்டார். உடனே நான் ஏன் இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே என சொல்லிவிட்டு விஜயகாந்த் ஃபோன் செய்து ஒரு ஜிம் திறக்கிறேன் நீங்கள் வரவேண்டும் என்றேன் சரி வந்துடா போச்சு என்று சொல்லி தேதியை கேட்டார்.
பிறகு ஒரு நாள் நேரில் சந்தித்த பொழுது அந்த ஜிம் திறப்பு விழாவுக்கு விஜய்யையும் அழைக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அவரோ அப்படியா விஜய் தம்பி வருதா, அப்போ எனக்கு கட் அவுட் வேண்டாம் தம்பிக்கு மட்டும் வை போதும் என்று சொல்லிவிட்டார்.
அதை அடுத்து விஜய்யிடம் சென்று ஜிம் திறப்பு விழா அழைப்பை கொடுத்துவிட்டு விஜயகாந்த் சாரம் வருகிறார் என்று அவரிடம் சொன்னேன் அதற்கு அவர் அப்படியா சரி அண்ணா நீங்க எனக்கு கட் அவுட் வச்சிடாதீங்க விஜயகாந்த் அண்ணனுக்கு மட்டும் வைங்க என்று சொல்லிவிட்டார். நான் இறுதியாக இரண்டு பேருக்குமே அடித்தேன் இந்த விழாவுக்கு அவர்கள் இரண்டு பேருமே வந்தார்கள் முக்கியமாக விஜயகாந்த் ஷூட்டிங்கில் இருந்து மேக்கப் உடனே வந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.