யோகிபாபுவின் சம்பளத்தை பார்த்து அதிரும் சக நடிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் யோகி என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட யோகிபாபு அஜித், விஜய்,  ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பிரபல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் தான் நடிக்க முடியும் என்பதை உடைத்த முதல் ஹீரோ யோகிபாபு என்று தான் கூறவேண்டும். இந்தநிலையில் தற்போது இவர் கர்ணன், டிக்கிலோனா, பிஸ்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியாக இருந்து வரும் யோகி பாபுவின் ஒரு படத்திற்கு ஒரு நாள் சம்பளம் ரூபாய் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

Leave a Comment