தமிழ் சினிமாவில் பிப்ரவரி 28ல் வெளியாக உள்ள திரைப்படங்கள்.!

1. திரௌபதி- மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரைபடம் திரௌபதி. இப்படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி அவர்கள் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஷீலா அவர்கள் நடித்துள்ளார். 2013ம் ஆண்டு வட சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு பெண்ணிற்கு தெரியாமல் நடந்த திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

2. பரமபதம் விளையாட்டு- திரிஷா அவர்கள் நடித்த திரில்லர் திரைப்படம் இப்படத்தை இயக்குனர் திருஞானம் அவர்கள் இயக்கியுள்ளார். பரமபதம் விளையாட்டு படத்தில் நந்தா, வேல ராமமூர்த்தி, அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் முன்பு நல்ல வரவேற்பை பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

3. இரும்பு மனிதன்- இயக்குனர் டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு, மதுசூதன் ராவ், இவர்கள் நடித்துள்ளனர். அதிரடி மற்றும் காதல் படமாக அமைந்துள்ளது இப்படத்தை சங்கர் மூவிஸ் எனும் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளது.

4. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- பிரான்சிஸ் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ளன இத்திரைப்படம் காதல் படமாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்க படுகிறது.

Leave a Comment