ஜூனியர் NTR மற்றும் ராம்சரண்னுக்கு பிடித்த தமிழ் இயக்குனர் யார் தெரியுமா.? தெரிஞ்ச ஆச்சரியப்படுவிங்க..

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி தற்போது வெளிவந்து வெற்றிநடை காணும் திரைப்படம் RRR. இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு ஆக்சன், செண்டிமெண்ட் ஆகிய சீன்களை திணித்து படத்தை வேற லெவெலில் எடுத்து உள்ளார்.

படம் தற்பொழுது ரசிகர்களை  வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. மேலும் மக்கள் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்த்து வருகின்றனர் அந்த அளவிற்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்த விமர்சனத்தையும் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ராஜமௌலியை மற்றும் ராம்சரன் ஜூனியர் என்டிஆர் ஆகியோர்களை வாழ்த்தி வருகின்றனர் இந்த நிலையில் RRR படத்தைப் பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்   படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்ரணை வாழ்த்தினார் அதேசமயம் ராஜமௌலியை “மகாராஜமௌலி” எனக்கூறி பதிவிட்டிருந்தார்.

RRR படம் விமர்சனத்தையும் தாண்டி இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்க  RRR அதில் நடித்த ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் பேட்டி கொடுத்து வருகின்றனர் அப்படி அவரிடம் பேசும்போது தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என கேட்டனர்.

அதற்கு வெற்றிமாறன் பெயரை இருவருமே கூறியிருந்தனர். தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தும் தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் ஆசைப்படுவது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment