சச்சின் 200 ரன்கள் அடித்த போட்டி குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் ஸ்டெயின்.!

0

மூன்று வண்ண போட்டிகளிலும் அதிவேக பந்து வீச்சாளராக ஜொலித்து அவர்தான் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டேனியல் ஸ்டெயின். இவரது காலத்தில் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லிக்கு அடுத்தபடியாக சிறப்பாக பந்து வீச கூடியவர் டேனியல்ஸ் ஸ்டெயின் அதுமட்டுமில்லாமல் தனது ஸ்விங் மூலம் எதிரணி வீரர்களை நடுநடுங்க வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேனியல் ஸ்டெயின் இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் டேனியல் ஸ்டெயின் அவர்கள் சச்சின் 200 ரன்கள் அடித்தது குறித்து தற்போது பேசியுள்ளார்.2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் சச்சின் ஒருநாள் போட்டியில் முதல் 200 ரன்கள் எடுத்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து டேனியல் ஸ்டெயின் பேசியது ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தவர் சச்சின் அதுவும் குவாலியரில் எங்களுக்கு எதிரான போட்டியில் அடித்தார். எனக்கு நினைவிருக்கிறது அந்த போட்டியில் சச்சின் 190 ரன்கள் அடித்த போது என்னுடைய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

sachin-tamil360newz-
sachin-tamil360newz-

ஏன் அவுட் கொடுக்கவில்லை என்பது போல் நான் நடுவர் அயன்கோல்டை பார்த்தேன் அப்பொழுது அவர் சுற்றி பார் நான் அவுட் கொடுத்தால் என்னால் திரும்பி ஹோட்டலுக்கு போக முடியாது என்பது போல் என்னைப் பார்த்தார் என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் சச்சின் 200 அடித்து வரலாற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.