துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாரதிகண்ணம்மா பரீனா – எப்படி இருக்கிறார்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் டிஆர்பி யில் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்கள் பலரும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு தொடராகும். இதில் ஹீரோ ஹீரோயினாக அருண் பிரசாத் மற்றும் வினுஷா தேவி  நடித்து வருகின்றனர். இந்த தொடரில் நடித்து வரும் பல நடிகர்கள் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து சினிமாவிலும் கால் தடம் பதித்துள்ளனர்.

அப்படி இந்த தொடரில் நடித்து வந்த பல நடிகர் நடிகைகளும் இதைவிட சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகின்றனர். அதன்படி சமீபத்தில் கூட இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகினார். இதில் இருந்து திடீரென விலகியதால் அவர் சினிமாவில் பயணிக்க போகிறாரா..

என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து பாரதிகண்ணம்மா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா மட்டும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலும் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் நம்பர் ஒன்னாக வலம் வருவதற்கு முக்கிய காரணம் பரீனாவின் நடிப்பும் தான். மேலும் இதில் இவர் நடித்து வரும் போது நிஜத்தில் கர்ப்பமாக இருந்த நிலையிலும் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வந்தார். தற்போது இவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையிலும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிப்பைத் தாண்டி சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் பரீனா சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற உடை அணிந்து மேக்கப் இல்லாமல் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தன. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் மேக்கப் இல்லாமலும் நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

farina-
farina-

Leave a Comment