தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் அடுத்த படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார் இந்த நிலையில் நேற்று திடீரென ரசிகர்களை பனையூர் உள்ள அலுவலகத்திற்கு வர வைத்து சந்தித்துள்ளார்.
கரூர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ரசிகர்களை நேரில் சந்தித்தார்.
விஜய் அலுவலகத்திற்கு வரும் வழியிலேயே ரசிகர்கள் வண்டியை செல்ல விடாமல் தளபதி தளபதி என கத்தி அலப்பறை செய்த வீடியோ இணைய தள பக்கத்தில் உருவாகி வருகிறது.
தளபதி விஜய் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு மாதத்தில் ஒரு முறையாவது ரசிகர்களை சந்திப்பது வழக்கம் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த விஜய் 65 திரைப்படத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரசிகர்களை சந்தித்துள்ளார்.
300க்கு மேற்பட்ட தளபதி ரசிகர்கள் வந்திருந்தனர்.
அதிகம் பேசாமல் கூற வேண்டியதை உடனடியாக சொல்லிக் விட்டு மேலும் ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.
The Day Fulfilled By @ActorVijay ❤❤❤#Master pic.twitter.com/r44ZSNGZzQ
— #LEO (@LeoMovie_) February 6, 2021