புதிய பங்களா வாங்கிய விஜயலட்சுமி சர்வைவர் நிகழ்ச்சியில் கொடுத்த ஒரு கோடி வேலை செய்கிறது என்று கூறிய ரசிகர்கள் – பதிலடி கொடுத்த சம்பவம்.

VIJAY-LAXMI-
VIJAY-LAXMI-

சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில்  எடுத்தவுடனேயே ஹீரோ, ஹீரோயின்னாக நடிப்பது வழக்கம் அந்த வகையில் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானர்.

முதல் படத்திலேயே ஹீரோயின்னாக நடித்தவர்அதன் காரணமாக என்னவோ இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்தன. அந்த வகையில் சரோஜா, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ஓடியவர் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது.

இதனையடுத்து தனது தசையை அப்படியே மாற்றிக் கொண்டாராம் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் மாறி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வலம் வருகிறார். விஜய் டிவி தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்திவருகிறார் இப்போ 5 வது சீசன் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 2- ல் நடிகை விஜயலட்சுமி வைல்ட் கார்டு மூலம் கலந்து கொண்டார். கடைசி வரையும் வந்தாலும் இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை மட்டும் பெற முடியாமல் போனது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி திறமை மற்றும் தனது புத்திசாலித்தனத்தின் மூலம் இது போட்டி வரை வென்றதோடு மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்றார் இந்த போட்டியின் மூலம் அவருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி புதிதாக ஒரு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் அந்த செய்தியை இணையதள பக்கத்தில் வைரலானது இதனை அறிந்த ரசிகர்கள் நீங்கள் சர்வைவர்  நிகழ்ச்சியில் ஜெயித்த காசை வைத்து தான் இந்த பங்களாவை வாங்குகிறீர்களா என கேட்டனர் அதற்கு பதிலளித்த விஜய்  இல்லை இது எனது சொந்த உழைப்பின் மூலம் நான் வாங்கியது சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட   வரவில்லை என கூறியிருந்தார்.