பிரபல பாஜக தலைவரிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்.! பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.. வைரலாகும் நியூஸ்

0
vanathi sirinivasan
vanathi sirinivasan

அஜித்தின் படங்கள் வெளிவந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆனதால் ரசிகர்கள் தற்போது வலிமை திரைப்படத்தை வேற லெவலில் எதிர்பார்த்து வருகின்றனர்.

படத்தை ஹச். வினோத் வேற ஒரு லெவலில் இயக்குவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மற்றும் இந்த கூட்டணியில் யுவன் இணைந்தால் இன்னும் நான்கு மடங்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இதன் விளைவாகவே ரசிகர்கள் முதல்வர், பிரதமர் என தொடங்கி பல பிரபலங்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து கிரிக்கெட் மைதானத்திலும் இங்கிலாந்து வீரர் அலி மற்றும் அஸ்வின் ஆகியோரிடமும் வலிமை பட அப்டேட் கேட்டனர்.

இந்த நிலையில் பிரபல பாஜக தலைவர் வானதி சீனிவாசனிடம் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர் இதற்கு பதிலளித்த அவர் நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் நிச்சயமாக கிடைக்கும் தம்பி என குறிப்பிட்டார்.

valimai-ajith
valimai-ajith

இவர் கோவை தெற்கு தொகுதியில் கமலை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது என்பது குறிப்பிட தக்கது எது என்னவோ வலிமை அப்டேட் செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.