பிகில் நடிகை அமிர்தா ஐயர் சிறந்ததையே எதிர்பாருங்கள் எனக் கூறியுள்ளதை பாராட்டும் ரசிகர்கள்.

0
Amritha-Aiyer-tamil360newz
Amritha-Aiyer-tamil360newz

Fans who admire Bigil actress Amritha Iyer have said, “Expect the best.”தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அமிர்தா. இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதற்கு முன் அவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து இவர் காளி,  பிகில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் ஃபுட்பால் கேப்டனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தன் மூலம் இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

தற்போது இவர் பிக்பாஸ் பிரபலமான கவினுடன் சேர்ந்து லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கொரோனா வைரசினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிலிருந்தபடியே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை அமிர்தா சமீபத்தில் தனது 26வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் கூறுகையில் நீங்கள் வலிமையாக இருக்கும் போது, உங்கள் மன அமைதியை, எதுவும் தொந்தரவு செய்ய முடியாது, சிறந்ததை மட்டும் சிந்தித்து. சிறந்தவை காக மட்டும் பணியாற்றுங்கள். சிறந்ததை மட்டும் எதிர்பாருங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

amirtha-tamil360newz
amirtha-tamil360newz