பயமாக இருக்கிறது என அறிவுரை கூறிய ஆர்த்தியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! உங்களுக்கு ஏன் இந்த வேலை

ஆர்த்தியின் அறிவுரையை பார்த்து ரசிகர்கள் பலரும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை மோசமாக இருக்கிறது அதனால்  பலரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கும் படி தமிழக அரசு அறிவுரை கூறி வருகிறது.மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பரவலை தடுப்பதற்காக பலரும் நிதியுதவி கொடுக்குமாறு அறிக்கை வெளியிட்டார் இதனால் பல பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள்.

மேலும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லை என்று வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அன்றாடத் தேவைகளுக்காக அல்லல் பட்டு வருகிறார்கள் அதனால் தமிழக முதல்வர் பதவி ஏறிய கையோடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஒரு அறிக்கையை வெளியிட்டார் இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காமெடி நடிகை ஆர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதற்கு ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதில் அவர் கூறியதாவது ரேஷன் கடைகளால் மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் வருகிறது அரசு அரிசி அட்டையை அவர்களின் அக்கவுண்டில் பணம் செலுத்தலாம் கூட்டத்தை தவிர்க்கலாமே கடுமையான வெயிலில் பெரும்பாலும் வயதானவர்கள் காத்துக் கிடக்கிறார்கள் பரிசளித்து பாருங்களேன் அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவை பார்த்த சிலர் சரியாக சொன்னீர்கள் அக்கா என தெரிவித்துள்ளார் ஆனால் மற்றவர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள் வங்கியில் செலுத்தினால்  மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பேங்க் காரர்கள் எடுத்துவிடுவார்கள் ஒரு நாளைக்கு 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது அதனால் எந்த ரேஷன் கடையிலும் கூட்டம் இல்லை நீங்கள் தேவையில்லாமல் எதையும் கூற வேண்டாம் மக்கள் மறுபடியும் ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டுமா.

கிராமப்புறங்களில் ஏடிஎம் வசதி பல இடங்களில் இல்லாமல் இருப்பதால் பணத்தை உடனே எடுக்க முடியாது இதனால் உங்கள் அறிவுரையை இங்கே கூற வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment