விஜய்யை சூழ்ந்துகொண்டு திக்குமுக்காட வைத்த ரசிகர்கள்.! பிடித்துத் தள்ளிய போலீஸ்காரர்கள்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

vijay-vote
vijay-vote

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  முதலில் தளபதி 65 திரைப் படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் போட்டி போட்டார்கள்.

கடைசியில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் டிலிப்குமர் இயக்கப் போகிறார் என சன் பிக்சர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தை  யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

மேலும் தளபதி 65 திரைப்படத்தின் பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது இந்த பூஜையில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் இந்நிலையில் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில் நேற்று சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது இதில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களித்தார்கள்.

அதேபோல் தளபதி விஜய்யும் சைக்கிளில் வந்து தனது வாக்கை மிகவும் எளிமையாக செலுத்தி சென்றார் அப்பொழுது ரசிகர்கள் சைக்கிளில் சென்ற விஜயை துரத்தினார்கள் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கினார்கள்.

மேலும் தளபதி விஜய் வாக்களித்துவிட்டு திரும்பி செல்லும் பொழுது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள் அதனால் விஜய் சிறிது நேரம் திக்கு முக்காடினார். கும்பலில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். பின்பு போலீஸ்காரர் ரசிகர்களை பிடித்து தள்ளி விஜய்யை பத்திரமாக மீட்டு ஸ்கூட்டியில் அனுப்பிவைத்தார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. ஸ்கூட்டியில் சென்ற விஜய்யை செல்பி வீடியோ எடுத்தும் ரசிகர்கள் தொந்தரவு செய்துள்ளார்கள் அதற்கு விஜய் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் மிகவும் பொறுமையாக சென்றுள்ளார் இதோ அந்த வீடியோ.