தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு பயணிப்பவர் ராம். இயக்குனர் ராம் இதுவரை பல்வேறு சிறந்த படங்களை இயக்கியுள்ளார் இவர் இதுவரை கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்களில் பேவ்ரெட் படங்களாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தங்கமீன்கள் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சிறப்பாக அமைந்தன இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் ராம் பிரேமம் பட நடிகர்நிவின் பாலியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவருடன் இணைந்து அஞ்சலி, சூரி போன்ற டாப் நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் சூட்டிங் ராமேஸ்வரம் சென்னை போன்ற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்வதால் ரசிகர்கள் படத்தை காண எதிர்நோக்கி இருக்கின்றனர். ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நிவின்பாலி ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

