“அண்ணாத்த” படத்தின் டிக்கெட்டை விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.! எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது திரைப்படங்கள் வெளிவரும் பொழுது அதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோலவே தான் தற்போது சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்து வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, யோகிபாபு, சூரி போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டு தான் இருக்கிறது இந்த திரைப்படம் நவம்பர் 3ஆம் தேதி மாலையே சிறப்புக் காட்சிகள் மற்றும் பிரீமியர் காட்சி ஆகியவை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும், வெளிநாட்டிகளும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது அதைத்தாண்டி அமெரிக்காவில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மாலை மூணு மணிக்கு எல்லாம் பிரிமியர் காட்சிகள் திரையரங்கில் வெளியிடப்படும் அதற்கான டிக்கெட் மட்டும் தான் சற்று அதிகம் என கூறுகின்றனர்.

பெரியவர்களுக்கு 20 டாலரும், சிறுவர்களுக்கு 15 டாலரும்  என கணிக்கப்பட்டுள்ளது.  கட்டண வசூலில் அதிகம் என கூறுகின்றனரே ஏன் 20 டாலர் இந்திய மதிப்பு சுமார் 1,400 ரூபாய் என தெரியவருகிறது. இருந்தாலும் இந்தியர்கள் இந்த படத்தை முதல் நாளே பார்க்க இவ்வளவு காசு செலவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் தமிழ்நாட்டில் கூட ஆரம்ப நாளில் ரஜினியின் திரைப்படங்கள் ஆயிரம் ரூபாய் எல்லாம் விலை போயுள்ளது. தர்பார், பேட்ட ஆகிய படங்கள் முதல் நாளில் ஆயிரம் ரூபாய் ஒரு டிக்கெட் என விற்று உள்ளனர். அதுபோல அண்ணாத்த படத்துக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment