AK 63 அஜித் அண்ணாவை வைத்து ஒரு சம்பவம் பண்ணி விடுங்க.! பிரபல இயக்குனரின் டுவிட்டை பார்த்து ரசிகர்கள் கோரிக்கை.

ajith 63
ajith 63

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் சிறுத்தை சிவா இவர் முதன்முதலில் சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். அதனால் தான் இவருக்கு சிறுத்தை சிவா என்ற பெயர் வந்தது.மேலும் அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து நான்கு திரைப்படங்களை இயக்கியவரும் இவரே.

அதாவது அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் தொடர்ந்து நான்கு திரைப்படங்கள் உருவானது. அதில் விசுவாசம் திரைப்படம் குடும்ப பாங்கான திரைப்படமாக அமைந்தது அதனால் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மேலும் விசுவாசம் திரைப்படம் அனைத்து இல்லத்தரசிகளையும் கவர்ந்தது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிறுத்தை சிவா அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது அதனால் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து 63வது திரைப்படத்தை இயக்க போகிறார் என கடந்த ஒரு வார காலமாக தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சிறுத்தை சிவாவே இதை ஒரு வார இதழுக்கு பேட்டியில் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் இன்று உழைப்பாளர்களின் தினம் என்பதால் பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்று தான் அஜித்தின் பிறந்தநாள் அதனால் அஜித்திற்கு பல இயக்குனர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள் அந்த வகையில் சிறுத்தை சிவா அஜீத்தை வாழ்த்தி  ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அவரிடம் அஜித் 63 படம் பற்றிய அறிவிப்பை கேட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவர் சார் சீக்கிரம் அஜித் 63 அறிவிப்பை விடுங்க ரசிகர் எல்லோரும் வெயிட்டிங்குல இருக்கோம். அஜித் அண்ணாவை வைத்து விசுவாசம், விவேகம் மாதிரி தரமான ஒரு சம்பவம் பண்ணிடுங்க  என கேட்டுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.