பிரம்மாண்டமான டைட்டிலுடன் தளபதி 65 போஸ்டரை வெளியிட்ட ரசிகர்கள்.! அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.

எப்படிப் பார்த்தாலும் தனது திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது அயராத உழைப்பை வெளிப்படுத்தி நடித்து வருபவர் தான் இளையதளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் மட்டும் அல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது இதில் விஜய் சேதுபதியின் நடிப்பு தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதில் பூஜா ஹெக்டே தளபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிடும் என பலரும் கூறி வருகிறார்கள்

இந்த திரைப்படத்தின் தலைப்பு தான் எப்போது வெளியாகும் என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் படக்குழுவிடம் கேட்டு வருகிறார்கள் ஆனால் அதற்கு படக்குழு ஒன்றும் பதில் அளிக்கவில்லை மேலும் தற்பொழுது தளபதி 65 படத்தின் தலைப்பு இதுதான் என ரசிகர்கள் பலரும் ஒரு போஸ்டரை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள் ஆம் இந்த போஸ்டரில் தளபதி65 திரைப்படத்திற்கு டார்கெட் என பெயர் வைத்துள்ளார்கள்.

thalapathi 65

அதுமட்டுமல்லாமல் இந்த போஸ்டரில் விஜய் கெத்தாக இருக்கிறார் மேலும் இந்த போஸ்டரை பார்த்த தளபதி ரசிகர்கள் பலரும் அவரது பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அதிகாரபூர்வமாக தளபதி நடிக்கும் இந்த படத்திற்கு தலைப்பு வெளிவருமா என கேட்டு பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தளபதி 66 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கபோகிறார் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version