ரசிகர்களே.. நீங்கள் எதிர்பார்ப்பதை விட புஷ்பா 2 வேற லெவலில் இருக்கும்.! அடித்து சொல்லும் நடிகை ராஷ்மிகா மந்தனா.

0

இளம் தலைமுறை நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் ரசிகர்களை கவர காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பின் தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருவது வழக்கம் அந்த வகையில்  கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும்..

இப்பொழுது அங்கு டாப் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடிப்பதால் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கிளாமராகவும் நடித்து அசத்தியிருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வேற லெவலில் ஹிட்டடித்தது. வசூல் ரீதியாகவும் 350 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெகு விரைவிலேயே உருவாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார் புஷ்பா இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் மற்றும் பெரியதாகவும் இருக்கும் என கூறி உள்ளார். இதனால் இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

மேலும் முதல் பாகத்தில் கடைசி காட்சிகள் விறுவிறுப்பாக முடிந்து உள்ளதால் நிச்சயம் இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கும் என ரசிகர்கள் ஏற்கனவே மனக்கோட்டை கட்டி நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஷ்மிகா மந்தனா இப்படி சொல்லி உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.