மாரிமுத்து இறந்த அதே நாளில் தான் இந்த முன்னணி நடிகரும் இறந்தாரா.! பலருக்கும் தெரியாத தகவல்..

Actor Murali: நடிகர் முரளி தற்போது இல்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்படி முரளியின் நினைவு நாள் இன்று என்பதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அவர் குறித்த தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த நடிகர் முரளி 80 காலகட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 1964ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அன்று பிறந்துள்ளார்.

பிறகு பிரேம பரவாய் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனது 20 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி பூ விலங்கு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு முரளி முதன் முதலில் அறிமுகமானார்.

இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பகல் நிலவு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த முதல் படமே இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது. பிறகு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவசந்தம் படம் தான் முரளிக்கு புது அடையாளத்தை பெற்று கொடுத்தது.

இவ்வாறு சினிமாவில் குறுகிய காலத்திலேயே வெற்றியை கண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமான முரளிக்கு தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் பெற்று ஹிட் படங்களை கொடுத்தார்.

அப்படி மறக்க முடியாத படம்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கடல் பூக்கள் இந்த படத்திற்காக 2000ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அப்படி இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார். இவ்வாறு திரைப்பயணம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் பொழுது முரளி செப்டம்பர் 8, 2010ஆம் ஆண்டு அன்று தனது 46 வயதில் மாரடைப்பால் காலமானார். இவ்வாறு மறைந்த நடிகர் முரளியை நினைவு நாளான இன்றைய ரசிகர்கள் நினைவுப்படுத்தி வருகின்றனர்.