தமிழ் சினிமா உலகில் பல நடிகர்கள் தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தாலும் அதில் ஒரு சில தவறுகளை செய்கின்றனர் ஆனால் நடிகர் அஜித் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் இதனால் அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கின்றன.
அதன் காரணமாக நடிகர் அஜீத்தை படங்களில் பார்ப்பதையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரா என வியந்து பார்த்து அவரை பின்தொடர ஆரம்பித்துவிடுகின்றனர் அந்த வகையில் ரசிகர்கள் மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் கூட இவரை பின்தொடர்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அஜித்தை பற்றி ஒவ்வொன்றையும் தெரிந்துகொண்டு அசத்துகின்றனர் அந்த வகையில் தற்போது அஜித்தை பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை மற்றும் அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் என்ன என்பதை தெள்ளத்தெளிவாக இப்பொழுது நாம் பார்க்க இருக்கிறோம் வாங்க போகலாம். நடிகர் அஜித்குமார் பிறந்த ஊர் : செகந்திராபாத், தெலுங்கானா. பள்ளிப்படிப்பு : சென்னை ஆசான் மெமோரியல் செகண்டரி ஸ்கூல்.
முதல் படம் : என் கணவர் என் வீடு. முதல் பாலிவுட் படம் : அசோகா. அஜித்திறகு பிடித்த கலர் : பிளாக். பிடித்த விளையாட்டு கிரிக்கெட், கார் ரேசிங். அஜித்துக்கு பிடிக்காத சாப்பாடு : வேகவைத்த காய்கறிகள். கூல் ட்ரிங்ஸ், சாப்ட் டிரிங்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள மட்டார்.
அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் தொழிலாளர்களுக்கு சாப்பாடு சமைத்து கொடுப்பது வழக்கம் குறிப்பாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் போன்றவற்றை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மற்றும் நடிகர்களுக்கு ஏதேனும் உதவி என்றால் சத்தமே இல்லாமல் சைலண்டாக செய்து முடிப்பார்.
இது அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. அஜித் ஒரு புத்தகப் பிரியர் வீடு முழுக்க நிறைய புத்தகங்களை வைத்திருக்கிறார் அதில் ஒரு புத்தகம் அஜித்திற்கு ரொம்ப பிடிக்கும் living with the Himalaya என்ற புத்தகம் இந்த புத்தகத்தை ரஜினிக்கு கூட அவர் வழங்கியிருக்கிறாராம்.
அஜித் பெரிதாக தங்க நகை பிளாட்டினம் போன்று பெரிதாக அணிவது கிடையாது ஆனால் கையில் ஒரே ஒரு மோதிரம் மட்டும் போட்டுக் கொண்டு இருக்கிறார் அது ஷாலினி கொடுத்த பரிசு என்பதால் அதை மட்டும் அணிந்து இருக்கிறாராம்.
அஜித் ஷாலினி மகன் மகள் வீடியோ நிறைய வைத்திருக்கிறாராம் தனது மகன் மகள்கள் வளர்ந்த பிறகு அவருக்கு சப்ரைஸ் பண்ணுவதற்காக நிறைய வீடியோக்களை வைத்து இருப்பதாக தெரியவருகிறது.
அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட பொழுது வித்தியாசமான பல கார்களை வாங்கி குவித்தார் தற்போது போட்டோ எடுக்க நிறைய ஆர்வம் இருப்பதால் நிறைய வித்தியாசமான கேமராக்களை வாங்கி வைத்துள்ளார் போட்டோஷூட்டில் இதுவரை ஷாம்லி, அப்புகுட்டி, சுருதிஹசன் பொன்ராம் பலரை போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
அஜித் படங்களில் நடித்தால் அந்த படத்திற்காக வாங்கப்படும் சம்பளங்களை செக்காக வாங்கிக் கொள்வாராம் அதற்கான வரியையும் சரியாக செலுத்துவதை இன்று வரையிலும் கடைபிடித்து வருகிறாராம்.