“நான் மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல”.! தனது புகைப்படத்தை விமர்சித்த ரசிகருக்கு ஓவியா பதிலடி

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் விமல் நடித்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இவர் சினிமா துறையில் அறிமுகமானது மலையாளத்தில் வெளியாகிய கங்காரு திரைப்படத்தின் மூலம் தான். தமிழில் களவாணி படத்தை தொடர்ந்து மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மெரீனா திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படி தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்த ஓவியா ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு அமையவில்லை பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

அப்பொழுது ஓவியாவிற்கு ரசிகர்கள் ஆர்மியை சமூகவலைதளத்தில் தொடங்கினார்கள், அதே போல் ஓவியா ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டால் சமூக வலைத்தளத்தில் அதனை ட்ரென்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள், இப்படி பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா தனது ஹேர் ஸ்டைலை மாற்றினார், இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என கேள்வி கேட்டுள்ளார் அதற்கு ஓவியாவும் மிகவும் நக்கலாக தலைமுடி கேன்சர் பாதித்தவர்களுக்கு விக் செய்ய கொடுத்து விட்டதாக கூறினார். அப்போதிலிருந்து ஓவியா தலைமுடியை நீளமாக வளர்க்காமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலை வைத்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் அவர் தலைமுடியை விமர்சித்துள்ளார் இதற்கு ஓவியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஓவியா கூறியதாவது ‘நான் மூளையை வளர்க்கவே நினைக்கிறேன் முடியை அல்ல’ என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக வருத்தப்படாதீர்கள் நான் விக் வைச்சிருக்கேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment