ரசிகர்களின் கனவு கன்னி தீபிகா படுகோன் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு செம ஸ்டெப் போட்டு இளசுகளை திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ

விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தினாலும் அதைவிட மிகப்பெரிய உச்சத்தை தொட்டது அந்தப் படத்தில் இடம் பெற்ற வாத்தி கமிங் பாடல் தான்.

அந்த பாடல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து வேற லெவல் கொண்டாடினார்கள் மேலும் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற பிரபலங்கள் டான்ஸ் ஆடி வேற லெவலுக்கு எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு வித விதமாக நடந்து செம போஸ் கொடுத்த வீடியோ இணைய தளபக்கத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

இந்த வீடியோ க்கு இடையில் கேப்ஷனாக BTS of BTS என்ற பதிவும் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை தற்போது லட்சக்கணக்கான பேர் கண்டுகளித்து வருகின்றனர் இதற்கிடையே ரசிகர் ஒருவர் இந்த பாடலுக்கு நீங்கள் மிகச் சிறப்பாக டான்ஸ் ஆடி உள்ளீர்கள் விரைவில் நீங்கள் தளபதி விஜயுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

விஜயின் வாத்தி கம்மிங் உங்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது என்பதும் இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment