டிடி-யை அந்த வார்த்தையைக் கூறி திருமணம் செய்துகொள்ள அழைத்த ரசிகர்.! தலையில் அடித்துக் கொண்ட டிடி வைரலாகும் வீடியோ.!

0

DD live chat with fans : விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி டிடி இவர் நீண்ட காலமாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவருகிறார், இருபது வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார், பல வருடங்களாக சினிமாத்துறையில் இருந்தாலும் இன்னும் இளமை குறையாத அழகுடன் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்குகிறார்.

தொகுப்பாளினி டிடி சினிமா திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், அதுமட்டுமில்லாமல் ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது, இவர்கள் விவாகரத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தது, பலரும் பல காரணங்களை கூறினார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் டிடி.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங்கில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் லைவ் சேட்டில் அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு தொகுப்பாளினி டிடி தலையில் அடித்துக்கொண்டு அக்கா என்று கூறிவிட்டு எப்படி திருமணம் பண்ணிக்கிறியான்னு கேட்கிற என கூறினார் அது மட்டுமில்லாமல் எல்லா நேரமும் எனக்கு ஏன் இது மாதிரி கேள்விகளையே கேட்கிறீர்கள் எனவும் கூறியுள்ளார் டிடி.