அந்த வலியையே அசால்டா தாங்கி கிட்டிங்க இதெல்லாம் ஒரு வலியா யாஷிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தனக்கு காது குத்தும் வீடியோவை வெளியிட்டு வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு மாடல் அழகியாக வலம் வந்தவர் இவர் தமிழில் அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

யாஷிகா எப்படியாவது தனக்கு இருக்கும் பெயரை மாற்றி விட வேண்டும் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் அந்த போட்டியில் கலந்து கொண்ட பிறகும் அவரது பெயரும் புகழும் கிடைத்தது ஆனால் கவர்ச்சி நடிகை என்ற அந்தஸ்தை குறையவில்லை.

அதன் பிறகு பல இயக்குனர்கள் யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் ஆனால் அனைத்து வாய்ப்பும் கவர்ச்சி கண்ணோட்டமாக தான் இருந்து வந்தது இந்த நிலையில் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து விட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு இருந்தார் ஆனால் இவரை பலரும் கவர்ச்சி பொருளாக தான் பார்த்து வந்தார்கள்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் ஆக்ஸிடெண்டில் சிக்கினார் அப்பொழுது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அதனால் ஒரு சில மாதங்கள் பெட்டில் ரெஸ்ட் எடுத்து வந்தார் அதன் பிறகு மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு காது குத்துகிறார்கள் இதற்கு கேப்ஷனாக எனக்கு இந்த வலி எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என கேப்டன் போட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் அவ்வளவு பெரிய கார் விபத்தில் இருந்து தப்பித்தீர்கள் இதெல்லாம் உங்களுக்கு சர்வ சாதாரணம் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

https://www.youtube.com/watch?v=0jJbQaopT0c

Leave a Comment