உங்கள மாதிரி அடுத்தவங்கள மானபங்கப்படுத்துற பொழப்பவிட நான் எவ்வளவோ மேல்.! ரசிகரின் கமெண்டுக்கு அபிராமி பதிலடி

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஒரு இந்திய மாடல் அழகியாக வலம் வந்தவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார் அதன் பிறகு சினிமாவில் நோட்டா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து கலவு என்ற திரைப்படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் பெமீதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக தான் இருக்கிறார் இந்த நிலையில் துருவ நட்சத்திரம், நெருஞ்சி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் அபிராமி 2019ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலம் அடைந்தவர்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேன் என்பவருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய வரும் இவர் தான். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் உள்ள இங்கு உள்ளோரை அழவைக்கும் சுடுகாடு என அபிராமியின் புகைப்படத்தை பார்த்து கிண்டல் அடித்துள்ளார்.

அதைப் பார்த்த அபிராமி டென்ஷனாகி சமூகவலைதளத்தில் மற்றவர்களை மானபங்கப்படுத்தி பிழைப்பது ஒரு வேலையா என திட்டி தீர்த்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்யும் வேலையை விட என்னுடைய வேலை மாடலிங் துறையை சார்ந்தது எனவும் என்னை விற்று வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்னை பார்த்து கொள்ள என்னுடைய அம்மாவும் சகோதரரும் இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் அபிராமி கூறியதை பார்த்த ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்து அபிராமியை தொடர்ந்து தாக்கி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

abirami
abirami

Leave a Comment