பெண் ரசிகையுடன் தல அஜித்..! இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர்தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டும் இல்லாமல் பல மெகா ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவருடைய திரைப்படம் திரையரங்கில் வெளிவருகிறது என்ற செய்தி வெளிவந்தாலே போதும் தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது ஏனெனில் இவருடைய திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம் தான் அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வலிமை என்ற திரைப்படம் வெளியாகியது.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டும் இல்லாமல் சுமார் 200 கோடி வசூலை வென்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதே கூட்டணியில் தல அஜித் தன்னுடைய 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்தது மட்டும் இல்லாமல் தல அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இதனால் இந்த திரைப்படத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் தல அஜித் அவர்கள் சென்னை திரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ajithkumar-11
ajithkumar-11

இவ்வாறு வெளிவந்த செய்தியை தொடர்ந்து மற்றொரு புகைப்படமும் வெளியாகி உள்ளன அதாவது தல அஜித் தன்னுடைய குட்டி ரசிகை ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் மற்றும் அந்த ரசிகை  ஆகிய இருவரும் ஒரே வகையான உடையில் இருப்பது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Leave a Comment