தலபதி 66 படத்தை கொண்டாடாமல் நேரடியாக தளபதி 67-யை கொண்டாடும் ரசிகர்கள்.! காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார் விஜய். அதன்பிறகு நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில்    நடிகராக நடித்துள்ளார்.  அதன்பிறகு துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு, குஷி, தமிழன், பகவதி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் என்ற திரைப்படம் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற திரைப்படத்தில்  நடித்து வருகிறார். அந்த திரைப்படம் முடிவடைவதற்கு முன்பே தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்கும் 66 திரைபடத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி 67 திரைப்படத்திற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை  ட்ரோல் செய்ததால் விஜய் ரசிகர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இவர் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் தளபதி 67 அப்டேட் விரைவில் வரும் என கூறியதும் அங்கிருந்த தளபதி விஜய் ரசிகர்கள் அனைவருமே எழுந்து நின்று கூச்சல் போட்டார்கள்.

மேலும் தளபதி ரசிகர்கள் தளபதி 66 திரைப்படத்தில் குடும்பம் சென்டிமெண்ட் திரைப்படமாக தான் இருக்கும் என கூறினார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் மாசாக கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 திரைப்படத்திற்கு திரும்பி உள்ளார்கள்.

Leave a Comment