சைஸ் பற்றி கேள்வி கேட்ட ரசிகரை தனது பாணியில் அலறவிட்ட நந்திதா ஸ்வேதா.! எவ்ளோ தில்லு பார்த்தீர்களா.!

0

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு பல நடிகைகள் நடிக்க வருகிறார்கள், அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பல நடிகைகள் காணாமல் போய்விடுகிறார்கள். இந்த நிலையில் ஒருசில திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா. இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அந்த திரைப்படத்தில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சில திரைப்படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கும் படியான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அதன் மூலம் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அப்பட்டமாக கேள்வி ஒன்றை கேட்டுள்ளார், இதனால் செம கடுப்பான நந்திதா ஸ்வேதா இந்த கேள்வியை உங்களுடைய அம்மா, அல்லது அக்கா தங்கச்சி போன்றோருடன் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

பல நடிகைகளிடம் ரசிகர்கள் இதுபோல் கேள்வி கேட்டு நடிகைகளை சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள் அவர்களுக்கெல்லாம் நடிகைகள் கொஞ்சம்கூட யோசிக்காமல் தரமான பதிலடி கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் நந்திதா ஸ்வேதாவும் தன்னைக் கேள்வி கேட்ட மோசமான கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.