ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை பார்த்து கிழி கிழி என கிழிக்கும் ரசிகர்கள்.! அட அப்படி என்னப்பா இருக்கு அதுல.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியதால் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு,வசந்த் ரவி, சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது.

இதனை தொடர்ந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் நேற்று சுனில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் பாடத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது திட்டி தீர்த்து வருகிறார்கள்.

அதாவது சுனில் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுனில் அவர்களின் பழைய போஸ்டரை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருவதை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் குறித்தும் டீசர் குறித்தும் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறி வருகிறார்கள்.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரஜினியின் கடைசி படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. ஜெயிலர் திரைப்படம் முடிந்தவுடன் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் சுனிலின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேத்தி இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Leave a Comment

Exit mobile version