திருமணத்திற்கு பிறகு விகாரமாக மாறிய ஹன்சிகா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

HANSIKA
HANSIKA

நடிகை ஹன்சிகா சமீபத்தில் கருப்பு புடவை அணிந்து கொண்டு தலை முடியை விரித்து வெறித்தனமாக பார்க்கும் இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த கெட்டப்பை பார்க்கும் பொழுதே மிகவும் ஆக்ரோஷமாக ஹன்சிகா இருக்கிறார் என தெரிய வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா சில வருடங்களாக பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.மேலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருந்த மார்க்கெட்டும் குறைந்துள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் மட்டும் வெளியாகிறது. அப்படி வெளியாகும் திரைப்படங்களும் பெரிதும் தோல்வினை அடைந்து வரும் நிலையில் இவரால் தன்னுடைய பழைய மார்க்கெட்டை பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

அதாவது நடிகை ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக இவருடைய திருமணம் நடைபெற்றது. இப்படிப்பட்ட நிலையில் இவர் நடித்து வந்த ஒரு திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தினை இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஆர். கண்ணன் தற்போது இந்த படத்தினை இயக்கியிருக்கிறார்.

அதில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பெயரிடாமல் உருவாகி வந்த இந்த படத்திற்கு காந்தாரி என பெயர் வைத்துள்ளார்கள் இந்த போஸ்டரில் ஹன்சிகா காஞ்சனா பட பானியில் படு ஆக்ரோஷமாக அமர்ந்து கொண்டு பார்க்கிறார். கருப்பு புடவை அணிந்து தலை முடியை விரித்து போட்டு வெறித்தனமான பார்வையுடன் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்.

HANSIKA
HANSIKA

இவ்வாறு இதற்கு முன்பு நடிகை ஹன்சிகா அரண்மனை திரைப்படத்தில் பேயாக நடித்த மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவதாக காந்தாரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தற்பொழுது அந்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் திருமணமான சில நாட்களில் இந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது எனவே தன் அழகிய மனைவி ஹன்சிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்து கண்டிப்பாக அவருடைய கணவர் மகிழ்ச்சியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது