ஏற்கனவே பட்டது போதாதா.. இப்பவும்மா.. அஜித்தின் முடிவால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்.?

அண்மை காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் அடித்தது. வலிமை படத்தை அடுத்து தனது 61-வது திரைப்படத்தில் நடிகர் அஜித் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஹச் வினோத் இயக்குகிறார் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர்  தயாரித்து வருகிறார். ஏகே 61 படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரையை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தின் இரண்டு கட்டப்பட பிடிப்பு வெற்றிகரமாக..

முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது. இதில் அஜித் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது AK 61 திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் AK 61 படத்தில் இருந்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அஜித் அண்மை காலமாக நடிக்கும் படங்களில் பைக் ரேஸ் உள்ள காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இந்த படத்திலும் அஜித் பைக் ரேஸ் காட்சிகளில் நடிப்பதாக கூறப்படுகிறது ஏற்கனவே அஜித் விவேகம், வலிமை போன்ற படங்களில் பைக் ரேஸ் காட்சிகள் பயன்படுத்தினார்.

அந்த படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனால் இந்த படமும் அப்படி இருந்து விடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு சற்று இருக்கத்தான் செய்கிறது. இதை அஜித்தும் உணர்ந்து இருப்பார் ஆனால் இந்த தடவை அதை சரி செய்ய ஒரு முக்கியமான காட்சியில் அஜித் பைக் சீனில் மிரட்டுவார் என ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment