“பீஸ்ட்” படத்தை பொறுத்தவரை விஜயை விட இந்த நடிகரைப் பற்றி தெரிந்துகொள்ள தான்.? ரசிகர்கள் அதிகமாக ஆசைப்படுகின்றனர்.

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் தளபதி விஜய் உடன் அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லே மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த  நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். பீஸ்ட் திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக ரெடியாக இருக்கிறது அதற்கு முன்பாக  படத்தை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் செல்வராகவன் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் தேடலாக இருந்து வருகிறது உண்மையில் சொல்லப் போனால் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது விஜய் எதிரிகளை எப்படி அடித்து நொறுக்குகிறார் என்பதே படமாக இருக்கும் என சரியாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செல்வராகவன் கதாபாத்திரம் மட்டும் இதுவரை ரசிகர்களால் கணிக்கப் படவில்லை ஏனென்றால் ஒவ்வொரு தகவலும் வேறுமாதிரியாக இருக்கிறது நடிகர் செல்வராகவன் இந்த திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் என ஒரு பக்கம் கூற மறுபக்கம் இந்தப் படத்தில் அவர் ஒரு ஹேக்கர்  வேலை செய்பவர் என கூறப்படுகிறது.

மேலும் மெயின் வில்லன் செல்வராகவன் தான் அவர் தனது வில்லன்களை வைத்து தனது எதிரிகளை ஒழித்துக் கட்டும் ஓவராக இருப்பதாக கூறப்படுகிறது இதனால் பீஸ்ட் திரைப்படத்தைப் பொறுத்தவரை விஜயை விட செல்வராகவனுக்கு எந்த மாதிரியான ரோல் என்பதை தெரிந்து கொள்ளவே ரசிகர்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment