ரசிகர்கள் தான் முக்கியம்..! கோடிக்கணக்கான காசை கொடுத்தும் வாங்க மறுத்த ரஜினி..! சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக் கொண்டவர். அதனாலயே ரஜினி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி தற்போது வரை 168 திரைப்படங்கள் நடித்துள்ளார். இருந்தாலும் இன்றும் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டும் ரசிகர்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதனை நன்கு உணர்ந்து கொண்டு ரஜினியும் ரசிகர்களை தீய வழியில் கொண்டு செல்லும் எந்த செயல்களையும் செய்ய மாட்டார். தற்போது பல கார்ப்ரேட் நிறுவனங்களும் பிரபல நடிகர் நடிகைகளுக்கு அதிக தொகைகளை கொடுத்து அவர்களது விளம்பர படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

அந்த நடிகர் நடிகைகளும் காசுக்கு ஆசைப்பட்டு சில விளம்பரங்களில் நடிக்கின்றனர். இதன் மூலம் தனக்கு பிடித்த நடிகர்கள் கூறுகிறார்கள் என்ற காரணத்தினால் உடல் நலத்திற்கு தீங்கான உணவுப் பொருட்கள் போன்ற ஒரு சில பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தற்போது ஆன்லைன் விளையாட்டின் மூலம் மக்கள் பலரும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த விளம்பரத்தை முன்னேற்றும் வகையில் பிரபல நடிகர் நடிகைகள் அதில் நடித்து வருகின்றனர். இதன் மூலம் ரசிகர்கள் பலரும் அந்த விளையாட்டை விரும்பி விளையாடி பின்பு பெரியளவு பிரச்சினையை சந்திக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் இதுபோன்ற எந்த விளம்பரங்களிலும் நடித்ததில்லை. ரஜினி அரசு சார்ந்த போலியோ சொட்டு மருந்து, கண் தானம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார் அதற்கும் அவர் காசு வாங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு பிரபல நிறுவனம் ஒன்று தனது காரை விளம்பரப்படுத்தும் வகையில் ரஜினிக்கு 200 கோடி வரை கொடுக்க முன் வந்தது ஆனால் ரஜினி எனக்கு என் ரசிகர்கள் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை என கூறிவிட்டாராம். பணத்திற்காக ரசிகர்களை பற்றி கவலைப்படாமல் எந்த விளம்பரத்திலும் நடிக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் மக்களின் நலனை யோசித்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment