வலிமை முதல் காட்சி வெளியிட தாமதமானதால் ரசிகர் ஒருவர் நாட்டு வெடிகுண்டை வைக்க முயற்சி – எங்கு தெரியுமா.?

valimai
valimai

சினிமா உலகில் ஒரு படம் சிறப்பாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் தான் அஜித் ரசிகர்கள் அஜித்தை திரைஅரங்கில் பார்த்தால் போதும்  கொண்டாடுவார்கள் . நடிகர் அஜித்தும் தன்னால் முடிந்த அளவுக்கு வருடத்துக்கு ஒரு படத்தைக் கொடுத்து சந்தோசப்படுத்தினார்.

இந்த நிலையில் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை திரைப்படத்தில் நடித்தார் இந்தப் படம் இரண்டு வருடங்கள் கழித்து இன்று கோலாகலமாக படம் ரிலீஸானது ரசிகர்கள் நேற்று இரவு முழுவதும் திரையரங்குகளில் கொண்டாடினர்.

முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு திரையரங்குகளில் படத்தை பார்த்து தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் ஒருசில நல்ல செய்தியையும் நடந்திருக்க ஒரு சில கெட்டதும் நடந்து இருக்கின்றன அவை ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

நாமக்கல்லில் நடந்த ஒரு கெட்ட செயல் தற்போது தீயாய் பரவி வருகிறது ரசிகர்கள் முதல் காட்சியை பார்க்க ஆவலாக இருந்து வந்து உள்ளனர் ஆனால் நாம் அதில் இருக்கும் கே எஸ் திரையரங்கம் சற்று தாமதமாகியதால் அஜித் ரசிகர்கள் உடனே ஆவேசம் அடைந்தனர் அதில் ஒரு ரசிகர் பூட்டி வைக்கப்பட்டிருந்த கதவின் மீது நாட்டு வெடிகுண்டை வைத்து வெடிக்க முயற்சி செய்துள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட திரையரங்கம் உடனடியாக போலீசாரை வரவழைத்து   கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து இருப்பினும் ரசிகர்களுக்கும்,  போலீஸும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு ஒரு வழியாக நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய பிரச்சனையை முடித்தனர்.