“பிக் பாஸ்” வீட்டில் என்ட்ரியாக போகும் பிரபல யூடியூப் ரிவியூவர்.! உள்ளாரா போய் எல்லாத்துகிட்டையும் பேட்டி எடுத்து உண்மையை வாங்க போறாரு.! அலறும் மற்ற போட்டியாளர்கள்.

0

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக மாபெரும் வெற்றி பெற்று வருகின்றனர். தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த நான்கு சீசனாக கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

மற்றும் வரும் ஐந்தாவது சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இதனிடையே இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் கண்டஷ்டன்கள் யார் யாரென அடிக்கடி லிஸ்ட் வந்துபோகின்றன. அதில் எல்லா லிஸ்டிலும் ஆங்கர் பிரியங்கா, ஷகிலா மகள் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு போன்றவர்கள் பெயர்கள் அடங்கியுள்ளன.

அந்தவகையில் பிரபல சினிமா விமர்சனர் ( youtube) விஜே அபிஷேக் கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பல நடிகர்களைப் பேட்டி எடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கூட இவர் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம் ரிலீசானதை தொடர்ந்து விஜய் ஆண்டனி,ஆத்மிகா மற்றும் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஆகியோரை பேட்டி எடுத்துள்ளார்.

அதில் வெயில் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான வெயிலோடு பாடலை பாடினார்.  அந்தப் பாடலைப் பாடி முடித்ததும் இவருக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது இவரை சினிமாவில் பாட வைத்து விடலாம் என கலாய்த்து வந்தன அந்த வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பலரும் கேலி செய்துள்ளனர்.

abishek
abishek

அதுமட்டுமில்லாமல் இவர் பல பிரபலங்களைப் பேட்டி எடுக்கும் போதுஅவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களை கண்டு கடுப்பாகாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் என்ன நடக்கும் என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.