தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹிட் அடிப்பதையும் தாண்டி வசூலிலும் வாரி குவிப்பதால் இவர் தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது கூட பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தெலுங்கு இயக்குனருடன் வம்சியுடன் கைகோர்த்து தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த அடுத்த படத்துக்கான கதை மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்வதே தளபதி விஜயின் ஸ்டைல்.
சினிமா உலகில் வெற்றிகரமாக விஜய் பயணித்து கொண்டிருந்தாலும் தனது குடும்பங்களுடன் முக்கிய நிகழ்ச்சி மற்றும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது அவருக்கு ரொம்ப பிடிக்கும் அதையே தற்போது பின்பற்றி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகிய இருவரும் அண்மையில் பெங்களூரில் உள்ள உறவினர் குடும்ப விழாவில் கலந்து கொண்டுள்ளனர்
அந்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷாலும் வருகை தந்துள்ளார் அப்போது மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. அதில் மூவரும் வேற லெவல் இருக்கின்றனர் என்பதுதான் ஹைலைட்.
மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷேர் செய்து வருவதோடு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
