அனைத்து காட்சிகளும் பிகில் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவித்த திரையரங்க உரிமையாளர்.! கொளுத்துடா வெடியை

0

வருகிற தீபாவளிக்கு பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளியாக இருக்கின்றன, விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம், விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன், ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் தீபாவளி ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றன. விஜயின் தளபதி 64 திரைப்படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது.

ஆனால் இதுவரை இந்த மூன்று திரைப்படங்களும் எப்பொழுது ரிலீஸ் என்ற தகவல் மட்டும் அறிவிக்கப்படவில்லை, இந்த நிலையில் சென்னை ரோகிணி திரையரங்க உரிமையாளர் புதிதாக ஸ்டேட்டஸ் ஒன்றை தட்டியுள்ளார் இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரோகினி சில்வர் ஸ்கிரீன் டைரக்டர் ரேவந்த் சரண் படத்தின் ரிலீஸ் பற்றி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் நாள் 6 ஸ்கிரீன்களிலும் பிகில் திரைப்படம் திரையிடப்படும்.

ஆவடி ரெமி சினிமாஸ் மற்றும், திண்டிவனம் ஸ்வஸ்திகாவில் அணைத்து ஷோக்களும் அந்த வாரம் முழுவதும் பிகில் தான் திரையிடப்படும்.” என்பதே அந்த தகவல்.